அதானி குழுமங்களில் முதலீடு செய்த எல்ஐசி நிறுவனத்திற்கு 50 நாட்களில் ஐம்பதாயிரம் கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதானி குழுமங்களின் பங்குகள் சரிந்து வரும் நிலையில் அதில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதானி குழுமங்களில் உள்ள ஏழு நிறுவனங்களில் எல்ஐசி மிகப்பெரிய தொகைக்கு முதலீடு செய்திருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 88 ஆயிரம் கோடி எல்ஐசி முதலீடு அதானி குழுமங்களில் இருந்த நிலையில் தற்போது அது 33 ஆயிரம் கோடியாக சரிந்து உள்ளது. எனவே கலந்த 2 மாதங்களில் எல்ஐசியின் முதலீடு 50,000 கோடி சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாகவும், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகவும், குறைந்துள்ளது.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் இந்த பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது