ஹைதராபாத் பொதுமக்கள் என்கவுண்டர் நடந்த இடத்தில் போலீஸாருக்கு மலர் தூவி, ஆரவாரமிட்டு மகிழ்ச்சியை வெளியிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சம்பந்தமாக நால்வரை கைது செய்தது போலீஸ் தரப்பு.
கைது செய்யப்பட்டவர்களிம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் கண்டெக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தப்பிக்க முற்பட்டதால் காலை 3 மணி அளவில் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த என்கவுண்டரில் மூன்று காவல்துறையினரும் காயமடைந்து மருத்துவனமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த நால்வரும் சுட்டுக்கொள்ளப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையர் சய்ஜனாருக்கு பொதுமக்கள் பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த என்கவுண்டரை அம்மாநில மக்கள் கொண்டாடி வரும் நிலையில், என்கவுண்டர் நடந்த இடத்தில் போலீஸாரின் மீது மலர் தூவியும் ’டிசிபி ஜிந்தாபாத்’ என கோஷமிட்டு மகிழ்ச்சிய வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல சாலையில் பெண்கள் கல்லூரி பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த பெண்கள் போலீஸாரை கண்டதும் கையசைத்து கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சென்றுள்ளனர்.