நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களுக்கான தடை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கில் முதற்கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி உள்துறை அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட போக்குவரத்து வசதிகளை தவிர சர்வதேச விமான பயணங்கள், ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான தடை தொடர்கிறது. அரசியல் கூட்டங்கள், மத நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிற்கான தடையும் தொடர்கிறது.
மேற்கண்ட நடவடிக்கைகளை தொடங்குவதற்கான தேதிகள் மற்றும் விதிமுறைகள் பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.