கொரோனா எதிரொலி காரணமாக தெலங்கானாவில் மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 16,116லிருந்து 17,265ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 519லிருந்து 543ஆக உயர்வு, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,302லிருந்து 2,547ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே 3 வரை ஊரடங்கு தேசிய அளவில் அமலில் இருந்தாலும் இன்று முதல் சில தளர்வுகளை மாநில அரசுக்கு மேற்கொள்ளலாம் என மத்திய அரசு முன்னரே அறிவித்திருந்தது. அதற்கு ஏற்ப கேரளா போன்ற மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா எதிரொலி காரணமாக தெலங்கானாவில் மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்போவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். அதோடு கொரியர் சேவைகளையும், உணவு சேவைகளயும் முற்றிலுமாக தடை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.