Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது கருத்துக்கணிப்பு அல்ல, பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு: ராகுல் காந்தி காட்டம்

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (13:59 IST)
இந்தியாவில் ஏழு கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது.

இந்த கருத்து கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் பாஜக வெற்றி பெறும் என்றும் பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கருத்துக்கணிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ராகுல் காந்தி இதுகுறித்து கூறுகையில், ‘இது மோடியின் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு என்றும் இது மோடியின் கற்பனைக்கு கணிப்பு என்றும் காட்டமாக பேசி உள்ளார்

மேலும் இந்தியா கூட்டணி 295 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இன்னும் இரண்டு நாள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நாள் இருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் கணிப்பு சரியா? அல்லது ஊடகங்களின் கணிப்பு சரியா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவமழை எப்படி இருக்கும்? ரமணன் பேட்டி!

நயவஞ்சக சக்திகளுக்கு இரையாகிவிடக் கூடாது. திருமாவளவன் கடிதம்.

போருக்கு சென்ற இடத்தில் ஆபாச படம் பார்க்கும் கொரிய ராணுவம்? - காரணம் கிம் ஜாங் அன்?

ஆண் டெய்லர்கள், ஆண் ஜிம் ட்ரெய்னர்களுக்கு தடை?? - அதிரடி உத்தரவு!

எனக்கு வாக்களித்தால் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்: தேர்தல் வாக்குறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments