போபாலில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்தது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மருத்துவமனை தீ விபத்தில் சிக்கிய 40 குழந்தைகளில் 36 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் 4 பெண்களும் தீ காரணமாக காயம் அடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
குழந்தைகள் மரணம் குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்து இறந்தவர்களின் பெற்றோருக்கு தலா 4 லட்சம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.