மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ உமங் சிங்கர் என்பவர் மீது அவரது மனைவியே பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் உமங் சிங்கர். இவருக்கு முன்னதாக திருமணமாகி முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து விட்டார். பின்னர் சில ஆண்டுகள் முன்னதாக இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அவரின் இரண்டாவது மனைவி அவர்மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தனது கணவருக்கு பெண்களை மறைமுகமாக வீடியோ எடுக்கும் பாலியல் பழக்கம் உள்ளதாக கூறியுள்ளார்.
தனது முன்னாள் மனைவியையும் இதுபோல அவர் வீடியோ எடுத்ததாகவும், தற்போது தன்னையும் அதுபோல வீடியோ எடுத்து அவர் மிரட்டுவதாகவும், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் தக்க நடவடிக்கை அவர்மேல் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.