மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேருடன் பாஜகவில் இணைந்ததால் அம்மாநிலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க 104 ஆதரவு உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் வசம் 99 தான் உள்ளது.
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழக் உருவாகியுள்ளது. எனவே, நடந்து முடிந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் கமல்நாத் பதவி விலகுமாரு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னால் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.
இதற்கு ஏற்ப தற்போது 12 மணிக்கு கமல் நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் தனது ராஜினாமாவை அறிவிப்பார் என தெரிகிறது. அப்படி அறிவித்தால் 107 உறுப்பினர்கள் கைவசம் கொண்டுள்ள பாஜக ஆட்சி அமைக்க கூடும்.