தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் அதன்பின் வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் தற்போது இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென இரவு நேர ஊரடங்கு சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதனால் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை அம்மாநில மக்கள் கொண்டாட முடியாமல் தவித்தனர்
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க சிவசேனா அரசு பிறப்பித்த இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 5ஆம் தேதி வரை அமலில் இருந்த இரவு நேர ஊடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது அம்மாநில மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதேபோன்று இமாச்சல பிரதேச மாநில அரசும் நான்கு மாவட்டங்களுக்கு அறிவித்திருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது