Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஊரடங்கு விடுமுறையில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்த கணவன் - மனைவி

ஊரடங்கு விடுமுறையில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்த கணவன் - மனைவி
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (20:09 IST)
ஊரடங்கு விடுமுறையில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்த கணவன் - மனைவி
மகாராஷ்டிரத்தைச்‌ சேர்ந்த ஒருவர்‌ ஊரடங்கு விடுமுறையை வீணாக்காமல் தனது வீட்டின் அருகே 25 ஆழக்‌ கிணற்றைத்‌ தோண்டி தண்ணீர் பிரச்சனை தீர்த்து வைத்துள்ளார். முதலில் அவர் கிணறு தோண்டியதை கேலி செய்த அந்த பகுதி மக்கள் தற்போது கிணற்றில் தண்ணீர் வந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
 
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து பலர் வீட்டில் சும்மா டிவி பார்த்து கொண்டு பொழுதை கழித்து வருகின்றனர். ஒருசிலர் புத்தகம் படிப்பது வீட்டு வேலைகள் செய்வது ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலைய்யில் மகாராஷ்டிரத்தின்‌ வாசிம்‌ மாவட்டத்தில்‌ கார்கேடா என்னும்‌ ஊரில்‌ கஜானன்‌ என்பவர் இந்த கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக போக்க முடிவு செய்தார். அவரும் அவர்‌ மனைவியும்‌ வீட்டருகில்‌ ஒரு கிணற்றைத்‌ தோண்டியுள்ளனர்‌. இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் கடப்பாரை, சம்மட்டி, மண்வெட்டி ஆகிய கருவிகளைக்‌ கொண்டு இரண்டே நாட்களில் 25 அடி ஆழக்‌ கிணறு ஒன்ரை தோண்டியுள்ளனர்‌. தொடக்கத்தில்‌ இதை ஏளனம்‌ செய்தவர்கள்‌ 25 அடி ஆழத்தில்‌ தண்ணீரைக்‌ கண்டதும்‌ தங்களைப்‌ பாராட்டுவதாகக்‌ கஜானன்‌ தெரிவித்துள்ளார்‌. இந்த கிணறால் அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பலருக்கு தண்ணீர் கஷ்டம் தீர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு மருத்துவர்கள் நாளைமுதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் - மருத்துவர் கூட்டமைப்பு