மராட்டியத்தில் உறியடி விழாவை விளையாட்டு பிரிவில் சேர்ப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
வட இந்தியாவில் நடைபெறும் உறியடி திருவிழா பிரபலமான ஒன்று. உயர கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பானையை ஒருவர் மீது ஒருவர் நின்று ஏணி போல அமைத்து ஏறி உடைக்க வேண்டும். அபாயங்கள் சில இருந்தாலும் இந்த விழா அப்பகுதியில் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் உறியடி விழாவை இனி விளையாட்டு பிரிவில் சேர்க்கப்போவதாக மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். உறியடி விழாவில் பங்கேற்கும் வீரர்களுக்கு விளையாட்டு பிரிவின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் ரூ.10 லட்சத்திற்கான காப்பீடும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்