Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு! – ஒத்துக்கொள்வாரா தாக்கரே?

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (16:22 IST)
மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இருப்பதாக சிறுபான்மை விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி நிறுவனங்களில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால் அப்போது ஆளும் கட்சியாக இருந்த பாஜக இந்த இடஒதுக்கீட்டை அமல்ப்படுத்தவில்லை.

தற்போது சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் சூழலில் மராட்டிய சட்டசபை பட்ஜெட் தாக்கல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தேசியவாத காங்கிரஸிலிருந்து நவாப் மாலிக் மாநில சிறுபான்மை விவகார அமைச்சராக உள்ளார்.

கடந்த ஆட்சிகளில் நிறைவேற்றப்படாத இந்த இடஒதுக்கீட்டை இந்த சட்டமன்ற கூட்ட முடிவில் நிறைவேற்ற முயற்சிப்பதாய் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தே.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தாக்கரே இந்த இட ஒதுக்கீட்டுக்கு சம்மதிப்பதாக இருந்தால் சிவசேனாவினர் இடையே இது சலசலப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments