கொரோனாவுக்கு பலியான மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதோடு அப்பாவிப் பாமர மக்களை மட்டுமின்றி பல விஐபிக்களின் உயிர்களையும் கொரோனா வைரஸ் பலியாக்கி வருகிறது அந்த வகையில் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களில் முக்கியமானவரான மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ்துபேலியா என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் பலியானதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாத்மா காந்தியின் இளைய மகன் மணிலால் காந்திக்கு மூன்று பேரன்கள் இருந்தனர். அவர்களில் அவர்களில் ஒருவரின் மகன் தான் சதீஷ்துபேலியா. இவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி நிமோனியா பிரச்சனையும் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்த நாள் கொண்டாடிய சில தினங்களில் கொரோனாவால் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது சகோதரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மகாத்மா காந்தியின் பேரனையும் விட்டுவைக்காத கொரோனா குறித்த தகவல் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது