இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஒரே நாடாக இணைய வேண்டும்
ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்து முதலில் பாகிஸ்தானும் அதன் பின்னர் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசமும் பிரிந்தது என்பது கடந்த கால வரலாறு. இந்த நிலையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் எப்போதும் எதிரி நாடாக இருந்து வருகிறது. அதே போல் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே நட்புறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மீண்டும் இணைய வேண்டும் என்றும் மூன்று நாடுகளும் இணைந்து ஒரே நாடாக மாற்ற முன்வந்தால் அதை வரவேற்போம் என்றும் தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது
பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு மீண்டும் இரண்டு ஜெர்மனியும் ஒன்றாக முடியுமென்றால் இந்தியாவுடன் இந்த இரண்டு நாடுகளை ஏன் இணைக்க முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்
ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக கராச்சி இருந்தது என்றும் இனிமேலும் எதிர்காலத்திலும் அதே மாதிரி இருக்க வேண்டும் என்றும் இந்தியாவுடன் இந்த இரண்டு நாடுகளை இணைக்க மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் அவரது இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது