இந்தியாவே பாலைவனம் ஆனது போன்று வெய்யில் பட்டயக் கிளப்புகிறது. தேர்தலின் போது 6 கடும் வெய்யில் முதியவர்கள் ஓட்டுப்போட வந்த போது பரிதாபமாக உயிரிழந்ததே இந்த அக்னி வெயிலுக்குச் சாட்சி எனலாம்.
எதோ அப்பப்ப தண்ணீருக்கு மேல வந்து தலை காட்டும் மீன் மாதிரி கொஞ்சா மண்ணுமேல இருக்கிற மரங்களால் நமக்கு காற்று வந்து கோடையின் சூட்டைத் தணித்து விடுகிறது.
கோடை வெயிலில் அரிசி, வடகம், கோதுமை, மாங்காய் வடு போன்றவற்றைக் காயவைப்பது வாடிக்கை. அதுபோல் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் ஹைதராபாத்தில் வசித்து வரும் ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள வெயிலின் தாக்கத்தை மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளிட்டுள்ளார். இதில் தன் வீட்டின் முன்பு நின்றிருந்த ஸ்கூட்டியில் அரிசி மாவில் தோசை ஊற்றுகிறார். ஒரு சில நொடிகளில் தோசை அழகாக வருகிறது.
இதே நிலமைதான் நம்மூரிலும் நிலவுகிறது என்றே சொல்லலாம்.