மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் நீக்கப்படலாம் என்றும், இந்த பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்படுவதால் திரிணமூல் ஊழியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.
பங்கான் சந்த்பாரா முதல் தாகூர் நகர் வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா "பாஜகவால் என்னை தேர்தல் களத்தில் நேரடியாக போராடி தோற்கடிக்க முடியாது. 2026-ல் பாஜக ஆட்சி இருக்காது" என்று சவால் விடுத்தார். மேலும், வங்கதேச ஊடுருவலுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளே பொறுப்பு என்றும் அவர் குற்றம் சாட்டினார்.