மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தன்னை அல்லது தனது மக்களை மேற்கு வங்கத்தில் பாஜக குறிவைத்தால், நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராடி முழு தேசத்தையும் குலுங்க செய்வேன் என்று மம்தா பானர்ஜி பகிரங்கமாக எச்சரித்தார்.
நீங்கள் வங்காளத்தில் என்னை குறிவைத்தால், என் மக்களின் மீதான எந்த தாக்குதலையும் நான் தனிப்பட்ட தாக்குதலாகவே கருதுவேன். அப்போது நான் முழு தேசத்தையும் குலுக்கி பார்ப்பேன். தேர்தலுக்கு பிறகு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்," என்று மம்தா ஆவேசமாக கூறினார்.
சி.ஏ.ஏ. படிவங்களை மதத்தின் அடிப்படையில் விநியோகிப்பதன் மூலம் மக்களை 'பங்களாதேஷ் குடிமக்கள்' என்று நிரூபிக்க பாஜக சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்..