மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தன்னுடைய தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேற்கு வங்க மாநிலத்தில் 4 கட்ட தேர்தல் முடிந்து விரைவில் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவு ஒன்றில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிப்பதாக அறிவித்தது.
இதனை அடுத்து திரிணாமுல் கட்சி தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் தனக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,