Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் முடிவின் ஆரம்பம்: பாஜகவுக்கு மம்தாவின் எச்சரிக்கை டுவீட்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (16:18 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் பாஜக முன்னிலை வகித்த போதிலும் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்வாங்கியதால் இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடையும் நிலையில் உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையான ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, முதல்வர் யோகி ராஜினாமா செய்த மக்களவை தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது அரசியல் விமர்சகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் உபி மாநிலத்தில் அதிக எம்பிக்களை கைப்பற்றும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில் இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பது அந்த கட்சிக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது

இந்த நிலையில் மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''உ.பி இடைத்தேர்தலில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு சிறந்த வெற்றி கிடைத்து இருக்கிறது. பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் இதுதான். '' என்று தெரிவித்துள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments