Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்கலேட்டரில் சுய இன்பம்: மெட்ரோவில் அரங்கேறும் ஆபாசங்கள்!

Advertiesment
டெல்லி மெட்ரோ
, புதன், 19 ஜூன் 2019 (14:06 IST)
டெல்லி மெட்ரோவில் இளம் பெண் முன்னிலையில் இளைஞர் ஒருவர் சுய இன்பம் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
டெல்லி மெட்ரோவில் பயணித்த இளம் பெண் ஒருவர் தனது பயணத்தின் போது தனக்கு நடந்த கொடுமையை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பெண் பதிவிட்டதாவது, நான் மெட்ரோவில் இருந்து எஸ்கலேட்டரில் இருந்து வெளியே வந்தேன். அப்போது ஏதோ தவறு நடப்பதை போன்ற உணர்வு ஏற்பட்டது. 
 
உடனே நான் பின்னால் திரும்பி பார்த்தேன். அப்போது என்னை பார்த்து கொண்டே இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்து கொண்டிருந்தார். உடனே அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்தேன். உடனே அந்த நபர் என்னை திட்ட தொடங்கினான்.
டெல்லி மெட்ரோ
உடனே நான் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. இது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மெட்ரோவில் பெண்களுக்கு தேவை இலவச பயணம் இல்லை. பாதுகாப்பான பயணம் மட்டுமே. அதற்கு அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 
 
ஏற்கனவே இதற்கு முன்னர் டெல்லி மெட்ரோவில் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் ஆபாச சைகைக் காட்டியும் அருகில் சென்று சுய இன்பம் செய்தும் ஒரு நபர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்திக்கு ஹேப்பி பர்த்டே – மோடி, ஸ்டாலின் வாழ்த்து !