Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேளுங்கள் அல்லது வீட்டை காலி செய்யுங்கள்: மணிசங்கர் அய்யர் மகளுக்கு கடும் எதிர்ப்பு..!

Siva
வியாழன், 1 பிப்ரவரி 2024 (08:04 IST)
ராமர் கோயில் திறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த மணிசங்கர் அய்யர் மகளுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மன்னிப்பு கேளுங்கள் அல்லது வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமர் கோவில் திறப்பு விழா அன்று மணிசங்கர் அய்யர் மகள் தனது சமூக வலைத்தளத்தில்  ராமர் கோயில்  திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்த உண்ணாவிரதம் மூலம் முஸ்லிம் மக்களுக்கு எனது அன்பையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் தீர்ப்பையே அவமானப்படுத்துவதாக உள்ளது என்று அந்த பகுதி குடியிருப்பாளர்கள் நல சங்கம் மணிசங்கர் அய்யர் மகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் அளவுக்கு பேச்சு சுதந்திரம் கிடையாது என்றும் ஒரு நல்ல குடிமகன் என்ற நெறிமுறையை தயவுசெய்து பின்பற்றுமாறும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

ராமர் கோயில் குறித்த விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது உடனடியாக குடியிருப்பில் இருந்து வீட்டை காலி செய்ய வேண்டும் என்று குடியிருப்பு நல சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ: பட்ஜெட்டுக்கு முன்பே வரிக்குறைப்பு அறிவிப்பு.. செல்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி..!

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments