ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு மணிப்பூர் அரசு நேற்று அனுமதி மறுத்த நிலையில் இன்று அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட பாதயாத்திரை கிழக்கு முதல் மேற்கு வரை நடைபெற உள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பால் என்ற நகரத்திலிருந்து பாதயாத்திரை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ள நிலையில் மணிப்பூர் அரசு திடீரென நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேண்டுகோளை பரிசீலனை செய்த மணிப்பூர் அரசு ஜனவரி 14-ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நடை பயணத்தை தொடங்க இன்று அனுமதி அளித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பவர் குறித்த பட்டியலை மணிப்பூர் அரசு கோரி உள்ளதாகவும் ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.