பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்த நிலையில் இந்த சந்திப்பின் போது என்ன நடந்தது என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்த மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் இந்த விளையாட்டுப் போட்டி துவக்க விழாவுக்கு வருகை தர வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழை தந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
மேலும் முதலமைச்சரின் சார்பில் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்தையும் பிரதமரிடம் கொடுத்ததாக அமைச்சர் உதயநிதி கூறினார். மேலும் திருச்சியில் நடந்த விழாவின்போது முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் அவரது பாதயாத்திரைக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வெள்ளம் குறித்து நிலவரங்களை ராகுல் காந்தி கேட்டார் என்றும் அவரிடம் விரிவாக தான் விளக்கியதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.