பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு அனைவரும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் பிரதமரின் இந்த வேண்டுகோளை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளின் முன் விளக்கை ஏற்றி இந்தியாவை ஒளிரச் செய்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஒரு சிலர் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்ததால் ஒருசில தீ விபத்து ஏற்பட்டது என்பதால் சில இடங்களில் மட்டும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மகளிரணி தலைவி மஞ்சு திவாரி என்பவர் நேற்று இரவு 9 மணிக்கு அனைவரும் விளக்குகள் ஏற்றும் போது ஒரு சிலர் பட்டாசுகளை வெடித்ததை பார்த்ததும் உற்சாகம் அடைந்து திடீரென தனது வீட்டுக்குள் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து வானத்தை நோக்கி சுட்டார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
அதுமட்டுமன்றி அவர் துப்பாக்கி சுடும் காட்சியின் வீடியோவும் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் உத்தரப் பிரதேச பாஜக மேலிடம் அவரை சஸ்பெண்ட் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது