Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷா இன்னும் குணமாகவில்லையா? மனோஜ் திவாரி டுவீட் திடீர் நீக்கம்

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (13:14 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாக சற்றுமுன் பாஜக எம்பி மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். மேலும் அமித்ஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்திருந்தார்.
 
இந்த நிலையில் திடீரென அந்த டுவிட் தற்போது நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்றும் அதனால் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டார் என்ற செய்தி தகவல் தவறானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதனை அடுத்தே பாஜக எம்பி மனோஜ் திவாரி தனது டுவிட்டை நீக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது 
 
மத்திய அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் குணம் அடைந்தார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக மருத்துவமனையிலிருந்து அறிவிக்கப்படுவதற்கு முன்பே மனோஜ் திவாரி டுவிட்டரில் அமித்ஷா குணமாகிவிட்டதாக டுவிட்டை பதிவு செய்ததும் தற்போது அந்த டுவிட்டை அவர் நீக்கியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments