Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2017 (16:59 IST)
மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் அற்றவை என்று ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். இவர் சென்னையின் ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாகவும், இதற்கு கைமாறாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்கள் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ரூ. 742 கோடி ஆதாயம் கிடைத்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த பணப் பரிவர்த்தனையில் அந்நிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்தனர். அதில் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உட்பட 6 பேர் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

இதனிடையே இந்த வழக்கு விசாரணை புதுடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவிரி மாறன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் முன்ஜாமீன் அளிக்கும்படி மூவரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணை நடந்த போது, மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கப் பிரிவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தது. புதுடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கலாநிதிமாறன் உள்ளிட்ட மூவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த போதும் தீர்ப்பு ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி அறிவித்திருந்தார்.

இதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஓபி ஷைனி, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இவ்வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் அற்றவை என்று தீர்ப்பளித்தார். சிபிஐ குற்றம்சாட்டியிருந்த நிறுவனங்களையும் வழக்கிலிருந்து விடுவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments