Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

Advertiesment
அப்துல் ரவூப் அசார்

Mahendran

, வியாழன், 8 மே 2025 (15:57 IST)
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
 
இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக, புல்வாமா மற்றும் சில பெரிய தாக்குதல்களுக்கு பின்னால் இருந்த அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
 
அப்துல் ரவூப், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இவர்தான் 1999-ம் ஆண்டு நடந்த கந்தஹார் விமானக் கடத்தலுக்கு பின்னால் மூளையாக இருந்தவர். தனது சகோதரர் மசூத் அசாரை இந்திய சிறையிலிருந்து விடுவிக்க அவர் இந்த கடத்தலை திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.
 
மேலும், டெல்லி நாடாளுமன்ற தாக்குதல், பதான்கோட் தாக்குதல், மற்றும் புல்வாமா தாக்குதல் போன்றவற்றிலும் இவர் நேரடியாக தொடர்புடையவர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும், இந்தியாவால் பல ஆண்டுகளாக தேடப்பட்டவராகவும் இருந்தார்.
 
இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதல், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!