மெட்ரோ ரயிலில் அழுக்கு உடையில் பயணம் செய்ய வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து மெட்ரோ ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அழுக்கு உடையில் விவசாயி ஒருவர் வந்தபோது அந்த விவசாயியை மெட்ரோ ஊழியர் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது
தான் பயண சீட்டு எடுத்து இருப்பதாகவும் தன்னை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் வாதிட்ட போதிலும் அவரை அந்த மெட்ரோ ஊழியர் அனுமதிக்கவில்லை
இதனை அடுத்து சக பயணிகள் மெட்ரோ ஊழியரை கண்டித்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பயணி ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் மெட்ரோவில் விஐபிகள் மட்டும் தான் பயணம் செய்ய முடியுமா? மெட்ரோவில் பயணம் செய்ய ஆடை கட்டுப்பாடு உள்ளதா என்று பலர் கேள்வி எழுப்பினர்
இதையடுத்து இது குறித்து விசாரணை செய்த மெட்ரோ அதிகாரிகள் விவசாயியை தடுத்து நிறுத்திய மெட்ரோ ஊழியரை சஸ்பெண்ட் செய்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.