குஜராத்தில் எம்.ஏ.க்களின் சம்பளம் 45,000 உயர்த்தப்பட்டுள்ளது.
குஜராத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.70,727 ஆக வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது.
ஆனால் அந்த மசோதா நிறைவேற்றப்படாத இருந்த நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் சம்பள உயர்வு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ரூ.70,727 ஆக இருந்த எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது ரூ1,16,316 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.45,589 உயர்த்தப்பட்டுள்ளது.