பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்தா (72), ஷாஜகான்பூரில் கல்லூரி நடத்திவருகிறார். இவர் அக்கல்லூரில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து நாட்டில் மிக முக்கிய பேசி பொருளாகி உள்ளது.
இந்த நிலையில் சின்மயானந்தாவால் பாலியல் பலாத்கரம் செய்யப்பட்ட மாணவி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அதன் பின் அவர் மாயமானார். அவரை கண்டுபிடிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி போலிஸார் மாணவியை தேடி வந்த போலீஸார், ராஜஸ்தானில் ஒரு நண்பருடம் தங்கியிருப்பதை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது மாணவி கூறியதாவது ;
சின்மயானந்தா மீது நான் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தேன்.ஆனால் அவர் மீது வழக்குப் பதியாமல் என்னை மிரட்டி, எனது விடுதி அறைக்கு சீல் வைத்தனர்.எனவே, ஊடகத்தினர் முன்னர் எனது அறையைத் திறக்க வேண்டும்.
எனக்கு 200 க்கும் மேற்பட்ட முறை போன் செய்து மசாஜ் செய்யச் சொல்லி தொல்லை தந்தார்.என்னை மட்டுமின்றி பல பெண்களின் வாழ்க்கையைப் பாழாக்கியுள்ளார் சின்மயானந்தா. என்னை நிர்வாணமாகப் வீடியோ எடுத்து வைத்து மிரட்டினார். அவரிடம் இருந்து விடுபட்டு, அவருக்கு தண்டனை வாங்கித் தர எண்ணி, எனது கண்ணாடியில் கேமாரா வைத்து, எவர் எனக்கு தொல்லை தருவதை சாட்சியாக பதிவுசெய்து காவல் நிலையத்தில் கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது, சின்மயானந்தாவுக்கு எதிரான மாணவி கொடுத்துள்ள ஆதாரங்கள் வசமாக சிக்கியுள்ளதால், உத்தரபிரதேச அரசியலில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாஜக ஆளும் தரப்புக்கு இது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.