கர்நாடகா மாநிலம் சிக்கமகளூருவில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மோடி, அமித்ஷா உருவ பொம்மைகளை விவாசிகள் சோளக்காட்டு பொம்மைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் நடிந்து முடிந்த தேர்தலின் போது சிக்கமகளூருவில் மாவட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர். இந்த மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலு பாஜக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதம் கழித்து மோடி, அமித் ஷா ஆகியோரின் கட் அவுட்கள் தற்போது விவசாயிகளால் காக்காகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பருவ மழை கர்நாடகா மாநிலத்தில் நன்றாக பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சில விவசாயிகள் தங்களது வயல்களில், தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட தேசிய தலைவர்களின் உருவ பொம்மைகளை சோளக்காட்டு பொம்மைகளாக வைத்துள்ளனர்.