Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டா ? இடைக்கால பட்ஜெட்டா ? – விளக்கமளித்த மோடி

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (07:57 IST)
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் மட்டுமே எனப் பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

இந்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அமையும் புதிய அரசே தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கமாக நிதியமைச்சரே பட்ஜெட் தாக்கல் செய்வார். ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதால் இடைக்கால நிதியமைச்சரான பியுஷ் கோயல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில் இடைக்கால நிதியமைச்சர் பியுஷ கோயல் ’ பட்ஜெட் என்றால் அது பட்ஜெட்தான். இடைக்கால பட்ஜெட் எல்லாம் இல்லை’ எனப் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பினார்.

மே மாதத்தோடு ஆளும் மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து அடுத்த ஓராண்டுக்கான பட்ஜெட்டை இந்த அரசு தாக்கல் செய்யும் அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர்.

இதனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று பிரதமர் மோடி ராஜ்யசபாவில் விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த பட்ஜெட்டில் வர இருக்கும் பட்ஜெட் தொடரில் சர்ச்சைக்குரிய மசோதாக்களைக் கொண்டுவர வேண்டாம் எனவும் எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments