இந்திரா காந்தியின் அவசர நிலையைவிட கடந்த நான்காண்டு மோடி ஆட்சி மோசமாக உள்ளது என்று முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
யஷ்வந்த சின்ஹா முன்னாள் மத்திய நிதியமைச்சர். இவர் பாஜகவில் இருந்து விலகியவர். இன்று அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-
மத்தியில் இருக்கும் அரசால் நாட்டில் எந்த சமுதாயமும் பாதுகாப்பாக உணரவில்லை. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்கள் என நாட்டின் முக்கியமான அமைப்புகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது.
எனது விமர்சனத்தில் இருக்கும் உண்மை பற்றி அறிந்த பாஜக தலைவர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த தைரியமற்று இருக்கின்றனர்.
தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் பலவீனமாக பரிவினருக்காக தொடர்ந்து போராடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.