இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீர மங்கை வேலு நாச்சியார் என்பது தெரிந்ததே. 18ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணியாக இருந்த இவர் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனி ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன் சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவருடைய பணி தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்