ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்ற நிலையில் நேற்று முதல் புரட்டாசி பிறந்ததை அடுத்து திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதன் காரணமாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
நேற்று திருப்பதியில் உள்ள வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்ததாகவும் இலவச தரிசனத்திற்கு சுமார் 30 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தாகவும் கூறப்படுகிறது
நேற்று தரிசனத்துக்கு வந்தவர்கள் இன்னும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே செல்ல முடியவில்லை என்றும் அந்த அளவிற்கு கூட்டம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது
புரட்டாசி மாதம் பிறந்ததால் திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிக படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.