இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 5000 முதல் 8000 வரை அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது சுகாதாரத் துறையினர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது
இந்த நிலையில் சற்று முன்னர் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இந்தியாவில் மொத்த பாதிப்பு 2,05,045 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனாவின் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்தில் மட்டும் 72,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில் 25,586 பேர்களும் டெல்லியில் 20,834 பேர்களும் குஜராத்தில் 17,615 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கை 5,780 என்றும் கொரோனாவில் இருந்து குணமாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது