கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் படு வீழ்ச்சியிலிருந்த நிலையில் இன்று 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகள் என இருந்த நிலையில் நேற்று 56 ஆயிரம் பள்ளிகள் என இறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதனால் முதலீட்டாளர்கள் 20 லட்சம் கோடி நஷ்டம் அடைந்ததாக தகவல்கள் வெளியானது இந்த நிலையில் இன்று காலை முதலே பங்குச்சந்தை உயர்ந்து உள்ளது என்பதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 660 புள்ளிகள் உயர்ந்து 57938 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 225 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 335 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது