ஆபாச படங்களை பார்த்து பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்யும் புகார்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மனைவி உள்பட வீட்டுப் பெண்களிடம் வலுக்கட்டாயமாக செக்ஸ் உறவு செய்யும் புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செல்போனில் ஆபாச படங்களை பார்க்கும் சிலர் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் மனைவிகளை ஆபாச படம் பார்க்க கட்டாயப்படுத்துகின்றனர் என்றும், மனைவி உறவு கொள்ள மறுத்தால் தனது ஆசையை நிறைவேற்ற தவறான முறையை அவர்கள் கையாள்வதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் மியாப்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆபாச படத்தை பார்த்து மனைவியையும் ஆபாச படங்களை பார்க்க சொன்னதாகவும், மேலும் உறவுக்கும் அழைத்ததாகவும், ஆனால் அவர் மறுக்கவே தனது ஆசையை நிறைவேற்ற மருமகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மருமகள் அலறி துடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆபாச இணையதளங்களை முடக்குவது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் 400க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகின்றன என்றும், இவற்றில் பெரும்பாலும் ஆபாச இணையதளங்களில் உள்ள வீடியோவை பார்த்து வரும் பிரச்சனைகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.