Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம்: அதிமுகவுக்கு அமைச்சர் பதவி உண்டா?

Webdunia
திங்கள், 20 மே 2019 (09:00 IST)
நேற்று வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் நாளை டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது.
 
இந்த கூட்டத்தில் புதிய அரசை யார் தலைமையில் அமைப்பது, எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த அமைச்சர் பதவிகள் கொடுப்பது உள்பட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
 
இந்த தேர்தலில் அதிமுக  சுமார் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அந்த கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றால் நிச்சயம் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல் தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை ஆகிய நால்வர் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments