நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பெரிதாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இல்லை என்பதும் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் கூட நீட்தேர்வு ஏற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் திடீரென நீட் தேர்வு முறையால் எஸ்சி எஸ்டி மற்றும் பழங்குடி வகுப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்
எம்பிபிஎஸ் போன்ற படிப்பை படிக்க தகுதி உடையவர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது