Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு..!!

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (16:45 IST)
2024ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 2024ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET PG) ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தேர்வு  மார்ச் 3ஆம் நடைபெற திட்டமிடப்பட்டது.  தேர்வு தேதியை ஒத்திவைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து  தேர்வு தேதி மாற்றம் குறித்து தேசிய தேர்வு வாரியம் தேர்வை ஒத்தி வைத்த நிலையில் தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.,

முந்தைய தேர்வு தேதியை மாற்ற பல்வேறு மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. நீட் பிஜி தேர்வுக்கு தயாராக போதுமான நேரம் இல்லை என மாணவர்கள் வாதிட்டனர். மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

தேர்வு தேதி மாற்றப்பட்டதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்கள் தயாரிப்பு முறையில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்து முழுமையாக அறிந்து கொள்ளலாம். முந்தைய ஆண்டு தேர்வு வினாத்தாள்களை பயிற்சி செய்ய கொள்ள கூடுதல் கால அவகாசம் இருக்கும்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments