Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி..

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (17:49 IST)
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோர் மீது அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சையாக பேசினார். இதனை தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக வண்ணாரப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

இதனை தொடர்ந்து நெல்லை கண்ணனை அரசு மருத்துவமனைக்கு மாற்றும்படி பாஜக மற்றும் இந்து முண்ணனியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பின்பு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நெல்லை கண்ணன் மாற்றப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments