சபரிமலையில் புதிய விமான நிலையம் ஏற்படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பேருந்து மற்றும் ரயில்கள் இருந்தாலும் விமானம் விமான நிலையம் அமைத்து விமானங்களை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு மற்றும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்று மணிமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு எஸ்டேட்டை விமான நிலையத்திற்கு கையகப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் அருகிலேயே புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரள அரசு அறிவித்த நிலையில் தற்போது அந்த திட்டம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது