குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 13ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்ததை ஏற்கனவே பார்த்தோம். 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலும், 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறும்.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நவம்பர் 21க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும், வேட்புமனுக்கள் நவம்பர் 24க்குள் திரும்ப பெற்று கொள்ளலாம்.
இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் புதிய வங்கி கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும் என்றும், இதன் மூலம் மட்டுமே தேர்தல் செலவுகளை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளரின் தேர்தல் செலவு வெளிப்படையாக இருக்கவே இந்த ஏற்பாடு என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.