Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய திட்டம் !

tirupathi
, வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (16:29 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள பிரபலமான கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்தக் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட், அறைகள், டிக்கெட் அதிக விலைக்கு விற்பது  போன்றவை ஒதுக்குவதில்  இடைத்தரகர்கள் மூலம் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், இந்த முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது, ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் குறித்து, அவர்களின் செல்போனுக்கு ஓடிபி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், இதிலும் சில முறைகேடுகள்  நடப்பதாக கூறப்படும் நிலையில், இனிமேல், பக்தர்களின் முகத்தை அடையாளம் காணப்படும் அல்லது  பயோமெட்ரிக் முறையில் பக்தர்களின் கைரேகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளையும் ஏலம் விட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி