இந்தியாவில் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் கால் டாக்ளாகப் கோலோட்சி வருகின்றன. இந்நிலையில், நாட்டில் 6 நகரங்களில் வாடகை ஆட்டோ திட்டத்தை ஊபர் (UBER) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இப்புதிய திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு மக்கள் ஆட்டோவை ஓட்டுநருன் வாடைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
இதில் ஒரு மணி நேரம் முதல் 8 மணிநேரம் வரை ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 மணிநேரத்திற்கு ரூ.148 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை , பெங்களூரு, புனே, மும்பை, டெல்லி, ஹைதரபாத் ஆகிய இடங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.