Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று டோஸ் தடுப்பூசி செலுத்தியவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (15:32 IST)
3 டோஸ் தடுப்பூசி செலுத்திய இளைஞருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி சேர்த்து 3 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் 3 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்த நிலையில் அவர் நேற்று மும்பை வந்தார். ஒமிக்ரான் அறிகுறி எதுவுமே இல்லாத நிலையில் அவருக்கு பரிசோதனை செய்ததில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 3 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்த மும்பை வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் மொத்தமும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

டிரம்ப் வெற்றிக்கு பின் லட்சக்கணக்கில் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறிய பயனர்கள்.. என்ன காரணம்?

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்ற வேண்டாம்: முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments