ஆந்திரா முழுவதும் 60 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், வழக்கறிஞர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.
மக்கள் இயக்கங்களின் தலைவர்கள், மாவோயிஸ்டுகள், நக்சலைட் தொடர்பான வழக்குகள், போலீசாருக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதாகவும் தெரிகிறது.
செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழக கூலிகள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஆஜராகி வாதாடிய திருப்பதி வழக்கறிஞர் சைதன்யா வீட்டிலும் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.