கொரோனா வைரஸ் பாதிப்பை காட்டிலும் நிபா' வைரஸ் பாதிப்பு ஆபத்தானது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள ஒரு சில பகுதிகளில் குறிப்பாக கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பரவி வருவதால் அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபா வைரஸ் குறித்து கூறிய போது கொரோனாவை விட நிபா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என்றும் கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை மட்டுமே இருந்தது, ஆனால் நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவீதம் இருக்கும் என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
எனவே வைரஸை கட்டுப்படுவது கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.