ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. திருமணம், மத ஊர்வலங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் 150 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் ஆணையர்கள் உறுதி செய்யவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.